ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
அயர்லாந்து : பால் ஸ்டிர்லிங் (கே), ஸ்டீபன் டோஹனி, முர்ரே கமின்ஸ், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், லோர்கன் டக்கர், ஆண்டி மெக்பிரைன், மார்க் அடேர், கிரஹாம் ஹியூம், ஜோசுவா லிட்டில்
ஜிம்பாப்வே: இன்னசென்ட் கையா, தடிவானாஷே மருமணி, சாமு சிபாபா, கேரி பேலன்ஸ், சிக்கந்தர் ராஸா(கே), ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் ங்காரவா, டெண்டாய் சதாரா, விக்டர் நயாச்சி