ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி கேப்டன் பால் ஸ்டிர்லிங் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே: தடிவானாஷே மருமணி, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ்(கே), டினாஷே கமுன்ஹுகம்வே, ரியான் பர்ல், பிரையன் பென்னட், கிளைவ் மடாண்டே, லூக் ஜாங்வே, ட்ரெவர் குவாண்டு, ரிச்சர்ட் ங்காரவா, பிளஸ்ஸிங் முசரபானி
அயர்லாந்து: ஆண்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங்(கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், கரேத் டெலானி, தியோ வான் வொர்காம், கிரேக் யங், ஜோஷுவா லிட்டில்