ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டியில் நெதர்லாந்து அணியும், இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ஹராரேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், வெஸ்லி பாரேசி, மூசா அகமது, கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், ஷாரிஸ் அகமது, பிரெட் கிளாசென், ஆர்யன் தத்.
ஜிம்பாப்வே: கிரெய்க் எர்வின்(கே), வெஸ்லி மாதேவெரே, கேரி பேலன்ஸ், சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, பிராண்டன் மவுடா, ரிச்சர்ட் ங்காரவா, டெண்டாய் சதாரா, பிளஸ்ஸிங் முசரபானி.