அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி டப்லினில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
ஏற்கெனவே முதல் டி20 போட்டியில் தோல்வியைத் தழுவிய அயர்லாந்து அணி இப்போட்டியிலாவது வெற்றிபெற்று பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், கெவின் ஓ பிரையன், ஆண்ட்ரூ பால்பர்னி (கே), ஹேரி டெக்டர்,நீல் ராக், ஷேன் கெட்கேட், சிமி சிங், ஜார்ஜ் டாக்ரெல், கிரேக் யங், பாரி மெக்கார்த்தி, பெஞ்சமின் ஒயிட்.
ஜிம்பாப்வே : வெஸ்லி மாதேவரே, தடிவனாஷே மருமணி, ரெஜிஸ் சாகப்வா, டியோன் மியர்ஸ், கிரேக் எர்வின் (கே), மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜோங்வே, வெலிங்டன் மசகட்ஸா, டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் ந்கராவா.