The wrestling federation
இந்திய மல்யுத்த வீரர்கள் கைது- உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகாா் கூறி, கடந்த ஒரு மாதமாக தில்லி ஜந்தா் மந்தரில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகத், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை கோரி வீராங்கனைகள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த டெல்லி காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டவுடன்,டெல்லி ஜந்தா் மந்தரில் இருந்து இவா்கள் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனா். அவா்களைத் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் கொண்டு சென்ற டெல்லி காவல்துறையினர், சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
Related Cricket News on The wrestling federation
-
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் கூடுதல் செயலாளர் வினோத் தோமர் சஸ்பெண்ட்!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தலைவருக்கு எதிராக இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில் கூட்டமைப்பின் கூடுதல் செயலாளர் வினோத் தோமரை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. ...
-
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்; விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் சூடுபிடித்துள்ள சூழலில் மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24