ஒலிம்பிக், காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போன்ற பெரும் தொடர்களில் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்று குவிப்பதில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளும் முக்கியமானவர்கள். ஆனால் அவர்களுக்கு மல்யுத்த கூட்டமைப்பில் கொடுமை நிகழ்த்தப்படுவதாகவும், பாலியல் ரீதியான தொந்தரவுகளும் அதிகமாக உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், உள்ளிட்ட பல வீரர், வீராங்கனைகள் நேற்று மதியம் திடீரென டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் கொடுமைகளை செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.
தொடர்ந்து பேசிய அவர், மல்யுத்தத்த விளையாட்டிற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத பலர் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அப்படி உள்ளவர்கள் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டு, பிரதமர், உள்துறை அமைச்சர்கள் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.