Advertisement
Advertisement
Advertisement

trent boult retirement

நியூசிலாந்துடனான எனது கடைசி நாள் - டிரென்ட் போல்ட் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
Image Source: Google
Advertisement

நியூசிலாந்துடனான எனது கடைசி நாள் - டிரென்ட் போல்ட் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

By Bharathi Kannan June 18, 2024 • 08:58 AM View: 172

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 39ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிரினிடாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினி அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதிலும் குறிப்பாக அந்த அணியில் சார்லஸ் அமினி 17 ரன்களையும், செசே பாவ் 12 ரன்களையும், நோர்மன் வனுவா 14 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் பப்புவா நியூ கினி அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Advertisement

Related Cricket News on trent boult retirement