Advertisement
Advertisement
Advertisement

Aus vs sco t20

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த டிராவிஸ் ஹெட்!
Image Source: Google
Advertisement

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த டிராவிஸ் ஹெட்!

By Bharathi Kannan September 05, 2024 • 11:36 AM View: 71

ஸ்காட்லாந்தில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் 17 பந்துகளில் அரைசதத்தை கடந்த டிராவிஸ் ஹெட், டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனையையும் படைத்து அசத்தினார். அதன்படி இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் பவர் பிளே ஓவர்களில் மட்டுமே 73 ரன்களைக் குவித்திருந்தார். 

Advertisement

Related Cricket News on Aus vs sco t20