Advertisement
Advertisement

Champions trophy qualifications

சாம்பியன்ஸ் கோப்பைக்கு இந்தியா வரவில்லை என்றால் இழப்பீடு வழங்க வேண்டும் - பாகிஸ்தன் கிரிக்கெட் வாரிய
Image Source: Google

சாம்பியன்ஸ் கோப்பைக்கு இந்தியா வரவில்லை என்றால் இழப்பீடு வழங்க வேண்டும் - பாகிஸ்தன் கிரிக்கெட் வாரியம்!

By Bharathi Kannan November 27, 2023 • 14:18 PM View: 210

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது முதல் முறையாக 1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடந்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்தும் வரும் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் நடைபெற இருந்தாலும், ஐசிசி முக்கியமான ஹோஸ்டிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உரிமை கோரியது.

ஆனால், அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானிற்கு பயணம் செய்ய இந்தியா மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. என்னதான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துவதாக இருந்தாலும், உலகளாவிய அமைப்பு அதனுடன் முக்கியமான ஹோஸ்டிங் ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜகா அஷ்ரஃப் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி சல்மான் நசீர் ஆகியோர் அஹ்மதாபாத்தில் உள்ள ஐசிசி நிர்வாகக் குழுவைச் சந்தித்து 2025 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Related Cricket News on Champions trophy qualifications