Harry brook
T20 WC 2024, Super 8: ஹாரி புரூக் போராட்டம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த 8 அணிகளில் இருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் 2-இல் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.செயின்ட் லூசியாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரிஸா ஹென்றிக்ஸ் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக்கும் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Harry brook
-
T20 WC 2024: புரூக், பேர்ஸ்டோவ் அதிரடியில் நமீபியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஜோஃப்ரா ஆர்ச்சர் கம்பேக்!
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கெற்கும் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ஹாரி ப்ரூக்கிற்கு மாற்றாக லிசாத் வில்லியம்ஸை தேர்வு செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்கிற்கு மாற்றாக லிசாத் வில்லியம்ஸை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடி; மெக்குர்க்கை தேர்வு செய்த டெல்லி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த லுங்கி இங்கிடி காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதை அடுத்து அவருக்கு மாற்றாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கை அந்த அணி ஒப்பந்தம் செய்தது. ...
-
குடும்பத்தை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை - ஹாரி ப்ரூக் விளக்கம்!
கடந்த சில ஆண்டுகளாக, எனது மனநலம் மற்றும் எனது குடும்ப நலனுக்கு முன்னுரிமை அளிக்கக் கற்றுக்கொண்டேன், உண்மையாகச் சொல்வதானால், குடும்பத்தை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை என ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக் விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஹாரி ப்ரூக்கிற்கான மாற்று வீரர் யார்? குழப்பத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி!
ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விலகிய டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் ஹாரி ப்ரூக்கிற்கு மாற்றாக அந்த அணி எந்த வீரரைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
வரவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஹாரி ப்ரூக் அறிவித்துள்ளார். ...
-
IND vs ENG: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; மாற்று வீரராக டான் லாரன்ஸ் சேர்ப்பு!
தனிப்பட்ட காரணங்களினால் இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்கிற்கு மாற்று வீரராக டான் லாரன்ஸை அணியில் சேர்த்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ...
-
ஐபிஎல் 2024 மினி ஏலம்: விறுவிறுப்பாக தொடங்கிய ஏலம்; டிராவிஸ் ஹெட்டை வாங்கியது ஹைதராபாத்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ...
-
இந்திய ரசிகர்களை நான் அப்படி பேசியிருக்கக் கூடாது - ஹாரி ப்ரூக் வருத்தம்!
நான் ஒரு முட்டாள். அன்றைய நேர்காணலில் அந்த முட்டாள்தனமான விஷயத்தை சொன்னேன். அதற்காக நான் கொஞ்சம் வருத்தப்படுகிறேன் என இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார். ...
-
உலக கிரிக்கெட் அடுத்த நட்சத்திர பேட்ஸ்மேன் யார்? - இந்திய வீரரை தேர்வு செய்த ஜேசன் ராய்!
உலக கிரிக்கெட்டின் அடுத நட்சத்திர பேட்ஸ்மேன் யார்? என்கிற கேள்விக்கு இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் அளித்துள்ள பதில் வைரலாகி வருகிறது. ...
-
WI vs ENG, 1st ODI: இங்கிலாந்து ரன் குவிப்பு; வெஸ்ட் இண்டீஸுக்கு கடின இலக்கு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
உலகக்கோப்பை 2023: கோப்பையை தக்க வைக்குமா இங்கிலாந்து?
நடக்கவிருக்கும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்வுள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.. ...
-
உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஜேசன் ராய் நீக்கம், ஹாரி ப்ரூக் சேர்ப்பு!
உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய்க்கு பதிலாக, மோசமான ஃபார்மில் உள்ள ஹாரி ப்ரூக்கிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47