Head coach
ஐபிஎல் 2025: பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனா. மேலும் எதிர்வரவுள்ள வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்களும் தங்கள் அணியில் இருந்து விலகி ஏலத்தை எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்களும் மாற்றப்படவுள்ளனர்.
Related Cricket News on Head coach
-
கௌதம் கம்பீர் தனது வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு தலைவர் -ராபின் உத்தப்பா!
கௌதம் கம்பீர் முக்கிய வாய்ப்புகளைத் தேடி, அவற்றைக் கைப்பற்ற முயற்சிப்பார். ஒரு தலைவராக, மக்கள் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்கும் அவரது திறமைக்கு நான் உறுதியளிக்கிறேன் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் - கௌதம் கம்பீர்!
இந்தியா எனது அடையாளம் மற்றும் எனது நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்!
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ...
-
இதுவே எனது கடைசி தொடராக இருக்கும் - ராகுல் டிராவிட்!
இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையிலேயே ஒரு சிறப்பான பணியாகும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மோடி, ஷாருக், தோனி பெயரில் விண்ணப்பங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்தி சிங் தோனி உள்ளிட்ட பெயர்களில் போலி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
பயிற்சியாளர் பதவிக்கு நாங்கள் எந்த ஆஸி வீரரையும் அணுகவில்லை - ஜெய் ஷா!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து நாங்கள் எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரையும் அணுகவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பத்தை வெளியிடும் பிசிசிஐ!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் பயிர்சியாளராக தொடரும் ராகுல் டிராவிட் - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்திய ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் ராகுல் டிராவிட் தொடர்வார் என பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஆஸி அணியின் துணைப் பயிற்சியாளராக விட்டோரி நியமனம்!
ஆஸ்திரேலியா அணியின் உதவி பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24