Icc world cup 2023
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலக பாகிஸ்தான் முடிவு?
அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அட்டவணைப்படி பாகிஸ்தானில் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா, ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி,பாகிஸ்தான் செல்லாது என தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும் என்று ஜெய் ஷா குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்றும், இதில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டோம் என்றும் ஜெய் ஷா கூறி இருந்தார்.
Related Cricket News on Icc world cup 2023
-
உலக கோப்பை அணியில் சஞ்சு சாம்சன் இருக்கலாம் - வாசிம் ஜாஃபர்!
ஆரம்ப காலங்களில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறிய சஞ்சு சாம்சன் தற்போது அதில் முன்னேறியுள்ளதால் ஒருநாள் உலக கோப்பையில் விளையாடும் தகுதியை எட்டியுள்ளதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பாராட்டியுள்ளார். ...
-
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறுமா?
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47