Ipl fixtures
இந்தியாவில் தான் ஐபிஎல் தொடர் நடைபெறும் - அருண் துமால் உறுதி!
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இத்தொடருக்கான வீரர்கள் மினி ஏலமும் துபாயில் கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்தது. இதில் ஆச்சரியப்படும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் காம்மின்ஸ் ஆகியோர் உட்சபட்ச விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
அவர்களைத் தவிர்த்து நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முக்கிய வீரர்களும் பல்வேறு அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அதிலும் மிக முக்கியமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த இரு சீசன்கள் செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியதுடன் அந்த அணியின் புதிய கேப்டனாகவும் அறிவித்துள்ளது.
Related Cricket News on Ipl fixtures
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47