Ipl retained players
சிஎஸ்கேவில் மீண்டும் ஜடேஜா; ஒற்றை வரியில் ரசிகர்களுக்கு நற்செய்தி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டான ரவீந்திர ஜடேஜா இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜாவின் தலைமையின் கீழ் சென்னை அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட இருந்த வேளையில் மீண்டும் அணியின் கேப்டனாக தோனியே பதவி ஏற்றார்.
இப்படி தனக்கு வழங்கப்பட்ட பதவியை மீண்டும் அணியின் நிர்வாகம் பறித்ததால் அதனால் அதிருப்தி அடைந்த ஜடேஜா சென்னை அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காயத்தை காரணம் காட்டி அந்த தொடரின் இறுதியில் அணியில் இருந்தே வெளியேறியிருந்தார். அதனை தொடர்ந்து தனது சமூகவலைதள பக்கத்திலும் சென்னை அணியை பின் தொடர்வதை தவிர்த்த ஜடேஜா சென்னை அணியுடன் தான் இருந்த புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கினார்.
Related Cricket News on Ipl retained players
-
ஐபிஎல் 2022: ஓவ்வொரு அணியும் தக்கவைத்த & விடுவித்த வீரர்களின் முழு விபரம்!
அடுத்த சீசனுக்காக 10 ஐபிஎல் அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் முழு விவரத்தைப் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47