Italy
இரு வேறு நாடுகளுக்காக சதமடித்து தனித்து சாதனை பட்டியலில் இணைந்த ஜோ பர்ன்ஸ்
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அடுத்த பதிப்பானது 2026ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஐரோப்பா கண்டத்திலுள்ள அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இத்தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று நடைபெற்றது. இதில் இத்தாலி மற்றும் ருமேனியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ருமேனியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இத்தாலி அணியானது ஜோ பர்ன்ஸ் மற்றும் ஜஸ்டின் மொஸ்கா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைக் குவித்திருந்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ பர்ன்ஸ் 12 பவுண்டரி, 4 சிக்ஸர் என 108 ரன்களையும், ஜஸ்டின் மொஸ்கா 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 72 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on Italy
-
யூரோ கோப்பையை வென்ற இத்தாலி அணிக்கு சச்சின் வாழ்த்து!
யூரோ கோப்பை 2020 கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில், இத்தாலி அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24