Itt vs tgc: Cricket News & Match Updates
TNPL 2024: நடராஜன், அஜித் ராம் அசத்தல்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தி தமிழன்ஸ் அபார வெற்றி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன் படி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக் - துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் துஷார் ரஹேஜா 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அமித் சாத்விக்கும் 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ராதாகிருஷ்ணன் 10 ரன்களுக்கும், கேப்டன் சாய் கிஷோர் ஒரு ரன்னிற்கும், பாலச்சந்தர் அனிருத் 119 ரன்களுக்கும், முகமது அலி 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் திருப்பூர் அணி 67 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த மான் பாஃப்னா - கனேஷ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அசத்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மான் பாஃப்னா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Itt vs tgc - Tesst
TNPL 2024: திருச்சி அணிக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திரூப்பூர்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47