Jos buttler wife: Cricket News & Match Updates
இணையத்தில் வைரலாகும் பட்லர் - லூயிஸ் தம்பதி புகைப்படம்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி ஃபைனலுக்கு முன்னேற முக்கிய காரணம் ஜோஸ் பட்லர். ஜோஸ் பட்லரின் அதிரடியான பேட்டிங்கால் தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த சீசனில் அபாரமாக பேட்டிங் ஆடிய பட்லர், 16 போட்டிகளில் 4 சதங்களுடன் 824 ரன்களை குவித்துள்ளார். ஆர்சிபிக்கு எதிரான முக்கியமான நாக் அவுட் போட்டியில் 60 பந்தில் 106 ரன்களை குவித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். இந்த சதம் இந்த சீசனில் அவரது 4வது சதம். இதன்மூலம் ஒரு சீசனில் அதிக சதங்கள் அடித்த விராட் கோலியின்(2016ல் 4 சதங்கள்) சாதனையை சமன் செய்துள்ளார் பட்லர். இறுதிப்போட்டியிலும் அவர் நன்றாக ஆடினால் ராஜஸ்தானுக்கு கோப்பை உறுதி.
ஜோஸ் பட்லர் நன்றாக ஆடும்போதெல்லாம் ஒரு பெண்ணை டிவியில் காட்டினர். உடனே அவர் தான் பட்லரின் மனைவி என அனைவரும் நினைத்தனர். ஆனால் லாரா என்ற அந்த பெண், ராஜஸ்தான் அணியில் ஆடும் தென் ஆப்பிரிக்க வீரர் ராசி வாண்டர் டசனின் மனைவி.
இதை அவரே தெளிவுபடுத்தியதுடன், டசனின் மனைவியான தன்னை, பட்லரின் பேட்டிங்கிற்கு உற்ச்சாகம் செய்ததும் பட்லரின் மனைவி என நினைத்ததாகவும், தனது கணவர் ஆடும் லெவனில் இடம்பெறாததால் பட்லரை உற்சாகப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
ஜாஸ் பட்லர் ஒவ்வொரு முறையும் சிக்ஸர்களை அடிக்கும் போதெல்லாம், மைதானத்தில் வாண்டர் டுசனின் மனைவி லாரா துள்ளி குதித்து உற்சாகமாக கொண்டாடுவார். அவரின் கூச்சல்கள் தொலைக்காட்சிகளில் நேரலையில் பதிவானது. Read More...
Related Cricket News for Jos buttler wife - Tesst
பட்லரை இரண்டாவது கணவராக ஏற்றுக்கொள்கிறேன் - வாண்டர் டூசன் மனைவியால் புதிய குழப்பம்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47