
ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்ட சூழலில் நேற்று ராஜஸ்தான் அணியும் முன்னேறி அசத்தியது.
ஆர்சிபி அணியுடனான வெற்றிக்கு முக்கிய காரணம் ஜாஸ் பட்லர் தான். 160 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஓப்பனிங் வீரர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 21 ரன்கள், கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்கள், தேவ்தத் பட்டிக்கல் 9 ரன்களுக்கும் வெளியேறி ஏமாற்றினர். எனினும் பொறுப்புடன் ஆடிய ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 106 ரன்களை குவித்து வெற்றியடைய செய்தார்.
இந்நிலையில் அதிரடி காட்டிய ஜாஸ் பட்லரை தனது 2ஆவது கணவராக ஏற்றுக்கொள்வதாக தென் ஆப்பிரிக்க வீரர் வாண்டர் டூசன் மனைவி கூறியது குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. ஜாஸ் பட்லர் ஒவ்வொரு முறையும் சிக்ஸர்களை அடிக்கும் போதெல்லாம், மைதானத்தில் வாண்டர் டுசனின் மனைவி லாரா துள்ளி குதித்து உற்சாகமாக கொண்டாடுவார். அவரின் கூச்சல்கள் தொலைக்காட்சிகளில் நேரலையில் பதிவானது.