Jsk vs sec dream11 prediction
எஸ்ஏ20 2025 எலிமினேட்டர்: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Sunrisers Eastern Cape vs Joburg Super Kings Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் முன்னேறின.
இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் அணி பார்ல் ராயல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ள ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Jsk vs sec dream11 prediction
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24