Prithivi shaw
ஐபிஎல் 2022: புள்ளிப்பட்டியலில் முன்னேறியது மகிழ்ச்சியளிக்கிறது - ரிஷப் பந்த்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் பிரித்வி ஷா இல்லாத சூழலில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னருடன் சர்ஃபராஸ் கான் இறக்கிவிடப்பட்டார்.
டேவிட் வார்னர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து சர்ஃபராஸ் கானுடன் மிட்செல் மார்ஷ் இணைந்தார். அதிரடியாக விளையாடிய சர்ஃபராஸ் 32 ரன்கள் (16 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், நிதானமாக விளையாடிய மிட்செல் மார்ஷ் அரை சதம் அடித்தார். அவர் 63 ரன் (48 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரபாடா வேகத்தில் ரிஷி தவானிடம் பிடிபட்டார். இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
Related Cricket News on Prithivi shaw
-
ஐபிஎல் 2022: ஷா, வார்னர் அதிரடி; கேகேஆருக்கு 216 டார்கெட்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 216 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL: இந்திய அணியின் கேப்டனாக தவான் நியமனம்; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான ஷிகர் தவான் தலைமையிலான 20 பேர் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24