Sa w vs nz w probable xi: Cricket News & Match Updates
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து, இறுதிப்போட்டி- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
South Africa Women vs New Zealand Women Final ICC Women's T20 World Cup 2024: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு குரூப் ஏ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் முன்னேறி அசத்தின.
இத்தொடரின் முதல் அரையிறுதிப்போட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் இதுநாள் வரை உலகக்கோப்பை தொடரை வென்றதில்லை என்பதால், நாளைய போட்டியில் எந்த அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Sa w vs nz w probable xi - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47