So vs wf: Cricket News & Match Updates
MLC 2024: சியாட்டில் ஆர்காஸை வீழ்த்தி வாஷிங்டன் ஃப்ரீடம் அணி அசத்தல் வெற்றி!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் சியாட்டில் ஆர்காஸ் - வாஷிங்டன் ஃப்ரீடம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்காஸ் அணியில் ரிக்கெல்டன் 4 ரன்களுக்கும், நௌமன் அன்வர் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் இணைந்த குயின்டன் டி காக் - ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் டி காக் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஹென்ரிச் கிளாசென் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 51 ரன்கள் எடுத்த நிலையில் கிளாசெனும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் சியாட்டில் ஆர்காஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, ஃப்ரீடம் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய லோக்கி ஃபெர்குசன் 4 விக்கெட்டுகளையும், நேத்ரவால்கர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for So vs wf - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47