Sri lanka u19
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கோங்கடி த்ரிஷா மற்றும் கமலினி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கோங்கடி த்ரிஷா ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் கமலினி 5 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய சனிகா சால்க் ரன்கள் ஏதுமின்றியும், பவிகா 7 ரன்களிலும், மிதில வினோத் 16 ரன்களிலும், ஆயுஷி ஷுக்லா 5 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த த்ரிஷா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on Sri lanka u19
-
யு19 உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை இழந்தது இலங்கை!
2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற இருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
SL vs AFG, 3rd ODI: அசலங்கா அதிரடியில் ஆஃப்கானை வீழ்த்தியது இலங்கை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47