Today match del w vs mum w
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
DEL-W vs MUM-W Match 13, TATA WPL 2025, Dream11 Prediction: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Today match del w vs mum w
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24