WPL 2025 Final: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான டபிள்யூபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

WPL 2025 Final: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Delhi Capitals vs Mumbai Indians Dream11 Prediction, WPL 2025 Eliminator: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னேறி அசத்தியுள்ளன.
இதனால் இம்முறையாவது அந்த அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடரின் முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்துள்ளது. இதனால் இம்முறையும் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
DEL-W vs MUM-W: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
- இடம் - பிரபோர்ன் கிரிக்கெட் மைதானம், மும்பை
- நேரம் - மார்ச் 15, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)
- மோதிய போட்டிகள் – 07
- டெல்லி கேப்பிட்டல்ஸ் - 04
- மும்பை இந்தியன்ஸ் - 03
- விக்கெட் கீப்பர் - யாஸ்திகா பாட்டியா
- பேட்ஸ்மேன்கள் - மெக் லெனிங், ஹர்மன்பிரீத் கவுர், ஷஃபாலி வர்மா
- ஆல்-ரவுண்டர்கள் - ஜெஸ் ஜோனசென், ஹீலி மேத்யூஸ் (கேப்டன்), நாட் ஸ்கைவர் பிரண்ட் (துணை கேப்டன்), மரிஸான் கேப், அமெலியா கெர், அனாபெல் சதர்லேண்ட்
- பந்து வீச்சாளர் - ஷிகா பாண்டே.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News