Warm up matches
அமெரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் ரத்து!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடப்பு ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. தொடருக்கு முன்னதாக பங்கேற்கும் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று உலகக்கோப்பை அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் தொடங்கின. அதன்படி நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் கனடா, ஓமன் மற்றும் நமீபியா அணிகள் வெற்றிபெற்றன.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த 5ஆவது பயிற்சி போட்டியில் வங்கதேசம் மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன. டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் நடைபெற இருந்த இப்போட்டியானது கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அமெரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, மைதானத்தில் உள்ள வசதிகள் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.
Related Cricket News on Warm up matches
-
பயிற்சி ஆட்டம்: கனடா, ஓமன் மற்றும் நமீபியா அணிகள் வெற்றி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகளில் கனடா, ஓமன் மற்றும் நமீபியா அணிகள் வெற்றிபெற்றுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47