Zim vs afg 2nd odi dream11 prediction
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Zimbabwe vs Afghanistan 2nd ODI Dream11 Prediction: ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 19) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஃப்கானிஸ்தான் அணி ஏற்கெனவே டி20 தொடரை வென்றுள்ள நிலையில் ஒருநாள் தொடரிலும் அதனை தொடரும் முனைப்பில் விளையாடவுள்ளது. அதேசமயம் டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு இந்த தொடரில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Zim vs afg 2nd odi dream11 prediction
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24