மீண்டும் வெற்றியுடன் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - ஸ்மிருதி மந்தனா!

Updated: Fri, Oct 25 2024 09:31 IST
Image Source: Google

நியூசிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதால் ஒருநாள் போட்டி நேற்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா 33 ரன்களையும், யஷ்திகா பாட்டியா 37 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 35 ரன்களையும், தேஜல் ஹசப்னிஸ் 42 ரன்களையும், தீப்தி சர்மா 41 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறியதன் காரணமாக, 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அமெலியா கெர் 4 விக்கெட்டுகளையும், ஜெஸ் கெர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணி வீராங்கனைகளால் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அந்த அணியில் அதிகபட்சமாக்வே புரூக் ஹாலிடே 39 ரன்களையும், மேடி கிரீன் 31 ரன்களையும் சேர்க்க, ஜார்ஜியா பிளிம்மர் 25, லாரன் டௌன் 26, அமெலியா கெர் 25  ரன்களில் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் நியூசிலாந்து மகளிர் அணி 40.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ராதா யாதவ் 3 விக்கெட்டுகளையும், சைமா தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, “கடந்த ஒன்றரை, இரண்டு மாதங்களில் நாங்கள் கடின உழப்பிற்கு பிறகு மீண்டும் வெற்றியுடன் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கிரிக்கெட்டில் முதல் பந்திலிருந்தே, உங்களுக்கு வெற்றிபெறும் நம்பிக்கை இல்லை என்றால் உங்களால் அதைச் செய்ய முடியாது. அதனால் நாங்கள் கலந்தாலோசித்து பேசியதுடன், அணியில் அனைவரும் சமமாக இருப்பதை உணர்ந்தோம்.

Also Read: Funding To Save Test Cricket

மேலும் இப்போட்டியில் சைமா தாக்கூர் சிறப்பாக பந்துவீசியதுடன், தொடக்கத்திலேயே சூஸி பேட்ஸின் விக்கெட்டையும் கைப்பற்றி எதிரணியை அழுத்தத்திற்குள் தள்ளினார். மேலும் அவர் கடந்த ஒன்றரை, இரண்டு மாதங்களாக எங்களுடன் இணைந்து பயணித்து வருகிறார். அவர் தனது ஆட்டத்தில் புத்திசாலித்தனமாக இருந்துள்ளார். இது அவருக்கு ஒரு ஆரம்பம் என்று நம்புகிறேன். நீங்கள் எவ்வாறு தொடங்குகிறீர்கள் என்பது முக்கியம், ஏனெனில் அதுதான் உங்களுக்கான அடித்தளத்தை அமைக்கிறது” என்று கூறினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை