வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேச அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது.

Advertisement

முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டெம்பா பவுமா 93 ரன்களை குவித்து 7 ரன்னில் சதத்தை தவறவிட்டார். கேப்டனும் தொடக்க வீரருமான டீன் எல்கர் 67 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சிறு சிறு பங்களிப்பு செய்ய, முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 367ரன்கள் அடித்தது.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் மஹ்மதுல் ஹசன் ஜாய் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். ஹசன் ஜாய் 137 ரன்களை குவிக்க, அவரது அபாரமான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 298 ரன்கள் அடித்தது.

அதன்பின் 69 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 204 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணி மொத்தமாக 273 ரன்கள் முன்னிலை பெற, 274 ரன்கள் என்ற இலக்கை வங்கதேசத்துக்கு நிர்ணயித்தது. 

இதையடுத்து 274 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணி, 2ஆவது இன்னிங்ஸில் வெறும் 19 ஓவரில் 53 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 220 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் டெஸ்ட்டில் 220 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News