அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - அஜிங்கியா ரஹானே!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் சுனில் நரைன் - அஜிங்கியா ரஹானே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணிக்கு தேவையான அடித்தத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் நரைன் 44 ரன்களிலும், ரஹானே 56 ரன்கலிலும் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுள் இழபிற்கு இழந்து 174 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் குர்னால் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்கல் பில் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரும் தங்களில் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். இதில் சால்ட் 56 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 10 ரன்னிலும், கேப்டன் ரஜத் படிதர் 34 ரன்களையும் சேர்த்த கையோடு பெவிலியன் திருபினர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய கேகேஆர் கேப்டன் அஜிங்கியா ரஹானே, “நாங்கள் பேட்டிங் செய்த சமயத்தில் 13ஆவது ஓவர் வரை நன்றாக விளையாடினோம் என்று நினைத்தேன், ஆனால் அதன்பின் அடுத்தடுத்து 2-3 விக்கெட்டுகள் வீழ்ந்ததன் காரணமாக ஆட்டத்தின் வேகத்தை அது மாற்றியது.
அடுத்து வந்த பேட்டர்கள் தங்களால் இயன்றதைச் செய்தார்கள், ஆனால் அது போதுமானதாக இல்லை. நானும் வெங்கடேஷ் ஐயரும் பேட்டிங் செய்யும்போது 200-210 ரன்களை எட்ட முடியும் என்று பேசினோம். ஆனால் அச்சமயத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்ததால் எங்கால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸின் போது ஆட்டத்தில் கொஞ்சம் பனியின் தாக்கம் இருந்தது. ஆனால் அவர்கள் பேட்டிங்கில் மிகச் சிறந்த பவர்பிளேயைக் கொண்டிருந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
அது நாங்கள் எதிர்பார்த்த விட அதிக ரன்களை கொடுத்திருந்தோம். இந்த ஆட்டத்தைப் பற்றி நாங்கள் அதிகம் யோசிக்க விரும்பவில்லை, ஆனால் அதே நேரத்தில் சில பகுதிகளில் சிறப்பாகச் செயல்பட முயற்சிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மார்ச் 26ஆம் தேதி தங்களுடைய இரண்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.