டி20 உலகக்கோப்பையுடன் ஆஸி வீரர் ஓய்வு - ரசிகர்கள் ஷாக்!

Updated: Thu, Nov 18 2021 11:51 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட். தற்போது 33 வயதாகும் மேத்யூ வேட், ஆஸி. அணிக்காக 36 டெஸ்டுகள், 97 ஒருநாள், 55 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

டி20 உலகக் கோப்பைப் போட்டி அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை அளித்தார். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக் கோப்பையுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வேட் அறிவித்துள்ளார். 

Also Read: T20 World Cup 2021

இதுகுறித்து பேசிய மேத்யூ வேட், “2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்று உலகக் கோப்பையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் ஊக்கமாக உள்ளது. அதற்குப் பிறகு ஓய்வு பெற்றுவிடுவேன். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன். டி20 உலகக் கோப்பையை மீண்டும் வெல்வதே என் லட்சியமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை