விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

Updated: Thu, Nov 11 2021 14:31 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பைப் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட்டிலும், 2ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 8 விக்கெட்டிலும் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய வீரர் முகமது ஷமியை சமூக ஊடகங்களில் பலர் கடுமையாக விமர்சித்தனர், அதைக் கண்டித்த கேப்டன் விராட் கோலி, ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

விராட் கோலியின் ஆதரவைத் தொடர்ந்து ட்விட்டரில் ஒருவர் கோலியின் 10 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த மிரட்டல் பெரும்வைரலாகி, விவாதப்பொருளானது, தேசிய மகளிர் ஆணையம், குழந்தைகள் ஆணையமும் இந்த மிரட்டல் குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தன.

இதையடுத்து, மும்பை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ட்விட்ரில் மிரட்டல் விடுத்தரை தேடும் பணியில் இறங்கினார். போலீஸார் நடத்திய விசாரணையில் தெலங்கானா மாநிலம் சங்கராரெட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் அகுபதினி ராம் நாகேஷ் எனத் தெரியவந்தது.

Also Read: T20 World Cup 2021

சங்கராரெட்டி நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து தனியார் மென்பொருள் நிறுவனத்தில் நாகேஷ் பணியாற்றி வந்த அவரை மும்பை போலீஸார் நேற்று அதிகாலை கைது செய்தனர். இதுகுறித்துபோலீஸார் கூறுகையில், “ கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நாகேஷ் தனது ட்விட்டர் பெயரை மாற்றி பயன்படுத்தி வந்துள்ளதைக் கண்டுபிடித்து கைது செய்தோம். அவர் மீது ஐபிசி பிரிவு 374(ஏ), 506, 500 தகவல்தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 மற்றும் 67(பி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை