நியூசிலாந்து அணிக்காக வரலாற்று சாதனை படைத்த ஸக்காரி ஃபால்க்ஸ்!

Updated: Sat, Aug 09 2025 20:55 IST
Image Source: Google

நியூசிலாந்து - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதனத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. 

அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டான நிலையில், அடுத்து விளையாடியா நியூசிலாந்து அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 601 ரன்களைக் குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் டெவான் கான்வே 153 ரன்களையும், ஹென்றி நிக்கோலஸ் 150 ரன்களையும், ரச்சின் ரவீந்திர 165 ரன்களையும் சேர்த்தன்ர். 

பின் 476 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஜிம்பாப்வே அணி மீண்டும் பேட்டிங்கில் சோபிக்க தவறியதுடன் 117 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸகாரி ஃபால்க்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மாட் ஹென்றி மற்றும் ஜேக்கோப் டஃபி தலா இரண்டு விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபிஷர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் இப்போட்டியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஸகாரி ஃபால்க்ஸ் சிறப்பு சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி, இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளியும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் என மொத்தமாக 9 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆசத்தினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அறிமுக போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.

முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக வில்லியம் ஓ ரூக் 93 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஸக்காரி ஃபால்க்ஸ் 75 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.  மார்க் கிரெய்க் கடந்த 2014ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 88 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் உள்ளார்.

Also Read: LIVE Cricket Score

நியூசிலாந்திற்காக அறிமுக டெஸ்டில் சிறந்த பந்துவீச்சு

  • 9/75 - ஜாக் ஃபால்க்ஸ் vs ஜிம்பாப்வே, புலவாயோ, 2025
  • 9/93 - வில் ஓ'ரூர்க் vs தென்னாப்பிரிக்கா, ஹாமில்டன், 2024
  • 8/88 - மார்க் கிரெய்க் vs மேற்கிந்திய தீவுகள், கிங்ஸ்டன், 2014
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை