பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி!

Updated: Mon, Aug 30 2021 20:41 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டிகள் ராவல்பிண்டி மைதானத்திலும், டி20 போட்டிகள் கடாஃபி மைதானத்திலும் நடைபெறுகின்றன. 

இந்நிலையில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரில் 25 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்க பாகிஸ்தான் சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே போட்டியை காண அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதனால் ஒருநாள் தொடரின் போது 4,500 பேரும், டி20 தொடரின் போது 5,500 பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை