லங்கா பிரீமியர் லீக் சீசன் 2 எப்போது தொடங்கும் என்பது குறித்து இலங்கை கிரிக்கெட் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Advertisement
முன்னதாக அறிவித்தபடி, லங்கா பிரீமியர் லீக்கின் (எல்பிஎல்) 2வது சீசன் ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2021 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்பதை இலங்கை கிரிக்கெட் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி, போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் என கூறப்படுகிறது.
Advertisement
இலங்கையின் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் கடந்த ஆண்டு ஐந்து அணிகளுடனு நடைபெற்றது. கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் பயோ பபுள் சூழலில் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.