2nd Test, Day 1: கருணரத்னே, சண்டிமால் நிதானம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் ஆஸ்திரேலியா!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி இன்று (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கனொலி அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் இலங்கை அணியில் பதும் நிஷங்கா, ரமேஷ் மெண்டிஸ், லஹிரு குமாரா ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதும் நிஷங்கா 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் கருணரத்னேவுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்த்தொடங்கியது. இதில் இருவரும் இணைந்து தங்களது 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கடந்தனர்.
இதன்மூலம் இலங்கை அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்துள்ள நிலையில் 87 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் திமுத் கருணரத்னே 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 87 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்களையும் சேர்த்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, பியூ வெப்ஸ்டர், கூப்பர் கனொலி, மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குஹ்னேமன், நாதன் லையன்.
Also Read: Funding To Save Test Cricket
இலங்கை பிளேயிங் லெவன்: பதும் நிஷங்கா, திமுத் கருணாரத்னே, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா(கேப்டன்), குசால் மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, நிஷான் பீரிஸ், லஹிரு குமாரா.