BAN vs IND, 2nd Test: 145 ரன்களை இலக்காக நிர்ணயித்த வங்கதேசம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா!

Updated: Sat, Dec 24 2022 21:48 IST
Image Source: Google

வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை பதிவு செய்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயானஇரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய இந்திய அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனை தொடந்து 2ஆவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. சுப்மன் கில் 7 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 2 ரன்களுடனும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அடுத்து வந்த புஜாரா 7 ரன்களில் ஸ்டெப்ம்பிங் முறையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய அக்ஸர் படேல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் விராட் கோலி 1 ரன்னில் வெளியேறினார். இதனால், இந்திய அணி 37 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

இதனையடுத்து, ஜெயதேவ் உனாத்கட் களமிறங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த அக்ஸர் பட்டேல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை சேர்ந்த்துள்ளது. அக்ஸர் பட்டேல் 26 ரன்னிலும், உனாத்கட் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

வங்கதேசம் தரப்பில் மெகதி ஹசன் 3 விக்கெட்டுகளையும், ஷாகிப் அல் ஹசன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இன்னும் 100 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 6 விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்துமா என்பது நாளை தெரியும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை