2nd Test, Day 4: அதிரடி காட்டும் ரிஷப் பந்த்; இமாலய ஸ்கோரை நோக்கி இந்திய அணி!

Updated: Sat, Jul 05 2025 17:40 IST
Image Source: Google

Birmingham Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி தொடக்க வீரர் கேஎல் ராகுல் அரைசதம் கடந்த நிலையில் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 269 ரன்களையும், ரவீந்திர ஜடேஜ் 89 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயப் பசீர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேமி ஸ்மித் 21 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 184 ரன்களையும், ஹாரி புரூக் 17 பவுண்டரிகளுடன் 158 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதன் மூலம் முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், யஷஸ்வி ஜெஸ்வால் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய் நன்காம் நாள் ஆட்டத்தை கேஎல் ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் கருண் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் களமிறங்கிய ஷுப்மன் கில் நிதானமாக விளையாட, மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரைசதம் கடந்தனர். பின் 10 பவுண்டரிகளுடன் 55 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ராகுல் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரிஷப் பந்த் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதன் காரணமாக உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரிஷப் பந்த் 41 ரன்களுடனும், ஷுப்மன் கில் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை