ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?

Updated: Sun, Aug 18 2024 22:24 IST
Image Source: Google

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஏனெனில் இத்தொடருக்கு முன்னதாக அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா எலம் நடைபெறவுள்ளது, இதில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் தங்கள் அணியில் சில மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்றாக, எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழு மொத்தமாக மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அணியின் ஆலோசகர் கேரி கிரிஸ்டன், கிரிக்கெட் இயக்குநர் விக்ரம் சோலங்கி உள்ளிட்டோரை அந்த அணி மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர்களாக நெஹ்ரா, கேரி கிரிஸ்டன் மற்றும் இயக்குநராக விகரம் சோலங்கி நியமிக்கப்பட்ட நிலையில், அவர்களின் பயிற்சியின் கீழ் அந்த அணி முதல் தொடரிலேயே கோப்பையை வென்றதுடன், இரண்டாவது தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அந்த அணியின் செயல்பாடுகள் பெரிதளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. 

இதன் காரணமாகவே வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக அணியின் பயிற்சியாளர்களை மாற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முடிவுசெய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த அணி புதிய பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அந்த அணி புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பட்சத்தில் அதற்கான தேர்வாக இருக்கும் மூன்று பயிற்சியாளர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

1. ஷேன் வாட்சன்

இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் முதலிடத்தில் உள்ளார். தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஆஷிஷ் நெஹ்ரா ராஜினாமா செய்தால், குஜராத் டைட்டன்ஸ் பார்க்க வேண்டிய விருப்பங்களில் வாட்சனும் ஒருவராக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமுல் இல்லை. உலகெங்கிலும் உள்ள பல்வேறு லீக்குகளில் தலைமைப் பயிற்சியாளராக வாட்சன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குஜராத் டைட்டன்ஸ் புதிய யோசனைகளைக் கொண்ட ஒரு இளம் தலைமை பயிற்சியாளரைத் தேடுகிறார் என்றால், வாட்சன் அணிக்கு ஒரு சிறந்த தேர்வாக இருப்பார்.

2. ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங் சமீபத்தில் ஐபிஎல்-க்கு தலைமை பயிற்சியாளராக திரும்ப ஆர்வமாக இருப்பதாக கூறினார். சமீபத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரிக்கி பாண்டிங்கை அந்த அணி நிர்வாகம் அவரை அணியில் இருந்து நீக்கியுள்ளது. இருப்பினும், அவரது உத்தியைக் கருத்தில் கொண்டு, குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்புள்ளது. மேலும் அந்த அணியில், ஷுப்மன் கில் மற்றும் பி சாய் சுதர்ஷன் போன்ற வீரர்கள் இருப்பதால், அவர்களை திறம்பட வழிநடத்தும் திறன் ரிக்கி பாண்டிங்கிற்கு உள்ளது. இந்தக் காரணங்கள் அவரை குஜராத் டைட்டன்ஸ் அணி முக்கிய தேர்வாக கருதும் என்பதில் சந்தேகமில்லை. 

3. யுவராஜ் சிங்

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதுதவிர்த்து குஜராத் டைட்டன்ஸின் தேடலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் பெயரும் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. யுவராஜ் சிங்கிற்க்கு பயிற்சியாளர் அனுபவம் இல்லை என்றாலும், அவர் இந்தியாவுக்கு ஒரு சிறந்த டி20 வீரராக இருந்தார். இதன் காரணமாக அவர் அணியின் தலைமை பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படும் பட்சத்தில் அவர் என்ன மாதிரியான வியூகத்தையும் பயிற்சியையும் கொடுக்க முடியும் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை