ஐபிஎல் 2025: சிஎஸ்கே லெவனில் தீபக் ஹூடாவிற்கு பதிலாக இடம்பெற வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
சிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெற இருக்கும் 11ஆவது லீக் போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளும் தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தீபக் ஹூடா மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கிறார். ஐபிஎல் 2025ல் சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அவர், அதில் 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாக சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் தீபக் ஹூடாவிற்கு பதிவிலாக லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
டெவான் கான்வே
இந்தப் பட்டியலில் டெவோன் கான்வே முதலிடத்தில் உள்ளார். இதுவரை198 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 6300 ரன்கள் எடுத்துள்ளார். மேற்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸின் தவிர்க்க முடியாத வீரராக இருந்த அவர், சிஎஸ்கேவுக்காக 23 போட்டிகளில் விளையாடி 48 சராசரி மற்றும் 141.28 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 924 ரன்களை எடுத்துள்ளார். இதனால் இவர் லெவனில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
விஜய் சங்கர்
இந்தப் பட்டியலில், இரண்டாவது இடத்தில் இந்திய ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இடம்பிடித்துள்ளார். கடந்த சில சீசன்களாக குஜராத் டைட்டன்ஸில் இருந்த அவர், நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செயப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு 14 போட்டிகளில் விளையாடிய அவர் 37.63 சராசரியாக 301 ரன்கள் எடுத்தார். மேலும் அந்த சீசனில் அவரது ஸ்ட்ரைக் ரேட் சுமார் 160 ஆக இருந்தது. இதனால் இவர் லெவனில் இடம்பிடிக்கும் பட்சத்தில் அது சிஎஸ்கேவுக்கு மேலும் பலத்தைக் கூட்டும் என்று கருதபடுகிறது.
ஷேக் ரஷீத்
இந்த பட்டியலில் தீபக் ஹூடாவிற்கு மாற்றாக இடம்பெற கூடிய வீரராக ஷேக் ரஷீத் பெயரும் உள்ளது. 20 வயதேயான இவர் பந்துவீச்சிலும் அணிக்கு கைகொடுக்க முடியும். மேற்கொண்டு அவர் உள்ளூர் போட்டிகளில் சதம் விளாசியும் அசத்தியுள்ளார். இதுவரை 17 போட்டிகளில் 15 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 352 ரன்களைச் எடுத்துள்ளார். இதனால் அவர் லெவனில் இடம்பெறவும் அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரானா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின், டெவோன் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் கரன், ஷேக் ரஷித், அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜன்பிரீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணன் கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.