ஐபிஎல் 2025: மெகா ஏலத்தில் கிளென் மேக்ஸ்வெல்லிற்காக போட்டி போட வாய்ப்புள்ள அணிகள்!

Updated: Mon, Aug 12 2024 20:36 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்னரே கேஎல் ராகுலை ஒப்பந்தம் செய்வதுடன், அவரை அணியின் புதிய கேப்டனாகவும் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கொண்டு இம்முறை வீரர்கள் ஏலத்தில் சிறப்பாக செயல்படவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருவ்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிளென் மேக்ஸ்வெல்லை அந்த அணி நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஏனெனில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லின் கடந்த ஐபிஎல் சீசன் மிகவும் மோசமாக இருந்தது.

அவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி, அதில் 52 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார். இதன் காரணமாகவே அவரை அணியில் இருந்து நீக்க ஆர்சிபி அணி முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிளென் மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணி விடுவிக்கும் எனில் மெகா எலத்தின் போது அவரை ஏலம் எடுக்க ஐபிஎல் அணிகளிடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி அவரது தொடக்க விலையான ரூ.2 கோடி இருந்து ரூ. 8 கோடிவரை அவருக்காக ஐபிஎல் ஐபிஎல் நிச்சயம் செலவுசெய்து தங்கள் அணியில் எடுக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் கிளென் மேக்ஸ்வெல் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் பட்சத்தில் அவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ள மூன்று அணிகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம், 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் கிளென் மேக்ஸ்வெல் பங்கேற்கும் பட்சத்தில் அவரை தேர்வு செய்ய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆர்வம் காட்ட அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் அவரது அதிரடியான பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சுக்காக டெல்லி அணி அவரை ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளது. முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.9 கோடி செலவு செய்து ஏலத்திலும் எடுத்துள்ளது. மேற்கொண்டு தற்சமயம் அந்த அணி அதிகபடியான ஆஸ்திரேலிய வீரர்களை தேர்வு செய்திருப்பதால் நிச்சயம் கிளென் மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க டெல்லி அணி ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ்

இந்த வரிசையில் அடுத்த அணியாக இருப்பது ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் தான். ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் அணியானது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 4 வெற்ற்களை மட்டுமே பெற்றது. இதனால் இந்த சீசனுக்கு முன் அந்த அணி நிர்வாகம் புதிய அணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதனால்தான் அவர்கள் தங்கள் அணியில் கிளென் மேக்ஸ்வெல் போன்ற ஒரு அதிரடி ஆல் ரவுண்டரை தேர்வு செய்ய அதிகபடியான வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி இதற்கு முன் கிளென் மேக்ஸ்வெல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

குஜராத் டைட்டன்ஸ்

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்தப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இடம்பெற்றுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் விலகலுக்கு பிறகு அந்த அணி எதிர்கொண்ட முதல் தொடரிலேயே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் அணியின் சமநிலையும் மிகவும் மோசமாக இருந்தது. இதன் விளைவு, 14 போட்டிகளில் 5இல் மட்டுமே வெற்றி பெற்று, லீக் சுற்றுடனே வெளியேறி, பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்தது. அத்தகைய சூழ்நிலையில், ஹர்திக்கின் வெற்றிடத்தை நிரப்ப, அவர்கள் ஒரு ஆபத்தான ஆல்ரவுண்டரை அணியில் சேர்க்க விரும்புகிறார்கள். அவர்கள் விரும் வீரராக கிளென் மேக்ஸ்வெல் இருக்கலாம். மேலும் அந்த அணியின் சொந்த மைதானமாக அகமதாபாத்தில் மேக்ஸ்வெல் தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்படவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை