SL vs IND: தேர்வு குழுவின் பாரபட்சத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்ட மூன்று வீரர்கள்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ளனர். மேற்கொண்டு டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி இத்தொடர் முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்படவுள்ளார்.
ஆனால் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி மீது மிகவும் காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டும் சில வீரர்களுக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதேசம் தொடர்ந்து சொதப்பிவரும், அணியில் இருந்த நீக்கப்பட்ட மற்றும் நீண்ட் நாள்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த வீரர்கள் என ஒரு சிலருக்காக சிறப்பாக செயல்பட்ட விரர்களை அணியில் இருந்து நீக்கிய எந்தவகையில் நியாயம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. அந்தவகையில் இத்தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் போன மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்
ருதுராஜ் கெய்க்வட் (Ruturaj Gaikwad)
இந்திய அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக ரன்கள் எடுத்திருந்த போதிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கை சுற்றுப்பயணத்திற்கான எந்த ஒரு அணியிலும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சமீபத்தில், அவர் ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடிய டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதில் அவர் 4 போட்டிகளில் 3 இன்னிங்ஸ்களில் 66.50 சராசரி மற்றும் 158 ஸ்ட்ரைக் ரேட்டில் 133 ரன்களையும் எடுத்துள்ளார். அது மட்டுமின்றி, கடந்த காலங்களில் ஐபிஎல் முதல் உள்நாட்டு கிரிக்கெட் வரை அனைத்து போட்டிகளிலும் தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் அவர் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில், அவர் 600+ ரன்களையும் எடுத்துள்ளார். இருப்பினும், இதையெல்லாம் மீறி, மீண்டும் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வாளர்களையும் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரையும் ஈர்க்க முடியவில்லை.
சஞ்சு சாம்சன் (Sanju Samson)
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனும் இந்திய ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்படாதது அணி தேர்வாளர்கள் மீது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஏனெனில் இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணியில் சஞ்சு சாம்சன் சதம் விளாசி அணியை வெற்றிபெற வைத்திருந்தார். மேற்கொண்டு அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50க்கும் அதிகமான சராசரியைக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், கடினமான நேரத்தில் அணிக்காக 58 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிபெற செய்தார். இருப்பினும், சஞ்சு சாம்சன் இந்த செயல்பாடுகள் அனைத்தும் தேர்வாளர்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை, மேலும் அவர் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதேசமயம் நீண்ட நாள்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கும் வீரருக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அபிஷேக் சர்மா (Abhishek Sharma)
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். தனது அறிமுக தொடரிலேயே அவர் சதமடித்து அசத்தியதுடன், பந்துவீச்சிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். ஆனால் ஷுப்மன் கில் தனது பேட்டிங் ஃபார்மை பாதுகாப்பதற்காக அபிஷேக் சர்மாவின் பேட்டிங் ஆர்டரை மாற்றிய சமயத்திலும் அவரது பேட்டிங்கில் கணிசமான ரன்களைச் சேர்த்துள்ளார். இதனால் அவர் அடுத்தடுத்த தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.