PAK vs WI: மூன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு தொற்று உறுதி!

Updated: Sun, Dec 12 2021 11:52 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணியுடன் 3 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த வியாழக்கிழமை கராச்சி நகரம் வந்தனர். முதல் டி20 போட்டி நாளை கராச்சியில் தொடங்குகிறது. வீரர்களுக்கு பயோ-பபுள் உருவாக்கும் வகையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஷெல்டன் காட்ரெல், ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் ஆகியோரும், ஒரு ஊழியர் என 4 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

இது தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவி்ப்பில்,“பாகிஸ்தானுக்கு வெஸ்ட் இண்டீஸ் சென்றபின் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல், ஆல்ரவுண்டர் ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் மற்றும் பயிற்சிப்பிரிவில் இல்லாத ஊழியர் ஒருவர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அடுத்துவரும் பாகிஸ்தான் தொடரில் விளையாடமாட்டார்கள்.இந்த 4 பேருமே முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். இவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை இருப்பினும் தொற்று இருக்கிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 வீரர்கள் ஊழியர் ஒருவரும் தனித்தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 3 வீரர்கள் பாதிக்கப்பட்டாலும் அணயின் திட்டத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 வீரர்கள், ஊழியர் ஒருவரும் அடுத்த 10 நாட்கள் அறையில் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால், ஒருநாள், டி20 தொடரில் முழுமையாகப் பங்கேற்க முடியாது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை