அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை நான் விரும்பினேன் - குல்தீப் யாதவ்!

Updated: Wed, Mar 22 2023 19:04 IST
3rd ODI: I Loved The One Against Alex Carey, Says Kuldeep Yadav After Picking Three-fer Against Aust (Image Source: Google)

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டெர்வீஸ் ஹெட் 33 ரன்களும், மிட்செல் மார்ஸ் 47 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.

மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட்டாகி வெளியேறினாலும், அடுத்தடுத்து களமிறங்கிய டேவிட் வார்னர் (23), அலெக்ஸ் கேரி (38), லபுசேன் (28) என அனைத்து வீரர்களும், ஆஸ்திரேலிய அணிக்கான தங்களது பங்களிப்பை ஓரளவிற்கு சரியாக செய்து கொடுத்ததன் மூலம் போட்டியின் 49 ஓவர்கள் முடிவில் 269 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதே போல் முகமது சிராஜ் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்நிலையில் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை கைப்பற்றியது குறித்து குல்தீப் யாதவ் செய்தியாளர்களிடையே பேசியுள்ளார். 

அதில், “நான் இங்கு இந்தியா ஏ தொடரில் விளையாடினேன் (கடந்த ஆண்டு நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக), அதனால் விக்கெட் மெதுவாக இருப்பதை அறிந்தேன், அதனால் நான் பந்தை அதிகமாக சுழற்ற முயற்சித்தேன். அவை முக்கியமான விக்கெட்டுகள், குறிப்பாக அலெக்ஸ் கேரிக்கு எதிரான விக்கெட்டை நான் விரும்பினேன். 

நான் எனது பந்துவீச்சில் அதிகம் உழைத்து வருகிறேன், விக்கெட்டுகளுக்குள் பந்து வீச முயற்சிக்கிறேன், அங்கிருந்து என்னால் பந்தை சுழற்ற முடிந்தால், பின்னால் கேட்ச் ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன, டேவிட் வார்னரைப் போல ஸ்லாக்கில் டாப்-எட்ஜ் வர வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் குல்தீப் யாதவ், அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை