நாட்டிற்க்காக ஆடும்போது ஏன் சலிப்பு வந்துவிடப்போகிறது - ஷுப்மன் கில்!

Updated: Thu, Feb 02 2023 11:17 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து மோதிய கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 234 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களுக்குள் 66 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்த போட்டியில் இந்தியாவின் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என 3 துறைகளுமே ஆச்சரியம் கொடுத்தன. ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் 63 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 126 ரன்களை விளாசினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரின் முதல் சதம் இதுவாகும். இதே போல பந்துவீச்சில் கேப்டன் பாண்ட்யா 4 விக்கெட்களும், அர்ஷ்தீப் சிங், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது பேசிய ஷுப்மன் கில், “நான் பயிற்சி செய்தது, இன்றைய போட்டியில் நன்றாக வெளிப்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. மிகப்பெரிய ஸ்கொர் அடிக்கவேண்டும் என்று முனைப்புடன் இருந்தேன். இலங்கை டி20 தொடரில் நடக்கவில்லை. இப்போது அது நிறைவேறியதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அணுகுமுறை உள்ளது. போட்டிக்கு முன்பு ஹர்திக் பாண்டியா என்னிடம் பேசும்போது, உன்னுடைய ஆட்டத்தை நீ ஆடு, வித்தியாசமாக எதையும் முயற்சிக்க வேண்டாம் என கூறினார். உண்மையில் நான் பிளேயிங் லெவனில் இருப்பேனா என்றெல்லாம் நினைத்தேன். அப்போது ஹர்திக் பாண்டியா எனக்கு பக்கபலமாக இருந்து, தொடர்ந்து அணியில் இருக்க வைத்தார். அதற்கு பலம் சேர்த்தது மகிழ்ச்சி.

இந்திய அணிக்காக விளையாடுவதற்காக கனவு கண்டோம். இப்போது அதிஷ்டவசமாக, மூன்றுவிதமான போட்டிகளிலும் விளையாடி வருகிறோம். நாட்டிற்க்காக ஆடும்போது ஏன் சலிப்பு வந்துவிடப்போகிறது. நிச்சயம் இல்லை” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை