இலங்கை அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - டேனியல் லாரன்ஸ் இணை தோடக்கம் கொடுத்தனர். இதில் டேனியல் லாரன்ஸ் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் டக்கெட்டுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஒல்லி போப் அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின்னரும் அதிரடியாக விளையாடி வந்த பென் டக்கெட் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 86 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஜோ ரூட் 13 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹாரி புரூக் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த கேப்டன் ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு போட்டிகளில் நான்கு இன்னிங்ஸ்களிலும் சோபிக்க தவறி விமர்சனங்களுக்கு உள்ளான ஒல்லி போப் இப்போட்டியில் சதமடித்து அதற்கான பதிலடியைக் கொடுத்துள்ளார். 

இந்நிலையில் இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 44.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக இப்போட்டி தடைபட்டது. அதன்பின்னரும் நிலைமை சாதகமாக அமையாத காரணத்தால் இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து தரப்பில் கேப்டன் ஒல்லி போப் 103 ரன்களுடனும், ஹாரி புரூக் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News