ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

Advertisement

இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் சாம் கொன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் அரைசதம் கடந்த நிலையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 34ஆவது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.

Advertisement

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு மீண்டும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தன்ர். 

பின்னர் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 82 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் 36 ரன்கலில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆகாஷ் தீப்பும் ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை ரிஷப் பந்த் 6 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்களுடனும் தொடர்ந்தனர்.

இதில் ரிஷப் பந்த் 28 ரன்களுக்கும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 221 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபலோ ஆனை தவிர்த்தனர். பின் 50 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜஸ்பிரித் பும்ராவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இருப்பினும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நிதீஷ் ரெட்டி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களைச் சேர்த்தள்ள நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் முன் கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கட்டது. இதில் இந்திய அணி தரப்பில் நிதீஷ் ரெட்டி 105 ரன்களுடனும், முகமது சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலண்ட், பாட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும், நாதன் லையன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News