டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங் வரிசையில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!

Updated: Fri, Dec 27 2024 08:00 IST
Image Source: Google

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இதன் மூலம், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முன்னாள் ஜாம்பவான்கள் டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் இணைந்துள்ளார்.  

இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை ஸ்டீவ் ஸ்மித் 111 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 68 ரன்கள் எடுத்து கிரீஸில் இருந்தார். இதற்கு முன் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கிரேக் சேப்பல் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 முறை 50+ ஸ்கோரையும், முன்னாள் ஜாம்பவான் டான் பிராட்மேன் 11 டெஸ்ட் போட்டிகளில் 12 முறை 50+ ஸ்கோரையும் பதிவுசெய்து இரண்டாம் இடத்திலும் உள்ளார்.

இந்த பட்டியலில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 முறை 50+ ஸ்கோரை அடித்து மூன்றாம் இடத்தில் உள்ள நிலையில், தற்போது ஸ்டீவ் ஸ்மித் 12 போட்டிகளில் 10 முறை 50+ ஸ்கோரை அடித்து அசத்தியுள்ளார்.

எம்சிஜி-யில் அதிக முறை 50+ ஸ்கோரை அடித்த வீரர்கள் 

  • கிரெக் சேப்பல் - 17 டெஸ்ட்களில் 13
  • டான் பிராட்மேன் - 11 டெஸ்டில் 12
  • ரிக்கி பாண்டிங் - 15 டெஸ்ட்களில் 11
  • ஸ்டீவ் ஸ்மித் - 12 டெஸ்ட்களில் 10

இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய  அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் தனது அறிமுக போட்டியில் விளையாடிய சாம் கொன்ன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 60 ரன்களை எடுத்த நிலையில், உஸ்மான் கவாஜா 6 பவுண்டரிகளுடன் 57 ரன்களையும், மார்னஸ் லாபுஷாக்னே 7 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றியும், மிட்செல் மார்ஷ் 4 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 31 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில்ல் உள்ளனர்.இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதவிர்த்து ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை