Melbourne cricket ground
டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங் வரிசையில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இதன் மூலம், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முன்னாள் ஜாம்பவான்கள் டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் இணைந்துள்ளார்.
இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை ஸ்டீவ் ஸ்மித் 111 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 68 ரன்கள் எடுத்து கிரீஸில் இருந்தார். இதற்கு முன் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கிரேக் சேப்பல் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 முறை 50+ ஸ்கோரையும், முன்னாள் ஜாம்பவான் டான் பிராட்மேன் 11 டெஸ்ட் போட்டிகளில் 12 முறை 50+ ஸ்கோரையும் பதிவுசெய்து இரண்டாம் இடத்திலும் உள்ளார்.
Related Cricket News on Melbourne cricket ground
-
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை - பிசிசிஐ!
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்த எம்சிஜி ஆர்வம்!
மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருகிறது. ...
-
AUS vs SA, 2nd Test: முதல் சதத்தில் சாதனைப் படைத்த அலெக்ஸ் கேரி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 575/8 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் சிக்கல்; ரசிகர்கள் சோகம்!
டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடக்கும் 23ஆம் தேதி மெல்போர்னில் மழை பெய்ய அதிக வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கை தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
மெல்போர்னில் வார்னேவுக்கு இறுதி மரியாதை!
ஆஸ்திரேலிய அரசு சார்பில் வார்னேவுக்கு இன்று மெல்போர்ன் மைதானத்தில் பிரமாண்டமான இறுதி மரியாதை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...
-
பிபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் இனி மெல்போர்னில் - தகவல்!
அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிக் பேஷ் லீக் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை மெல்போர்னில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022 : தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஐசிசி!
2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24