ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் முன்னிலை பெற்றது.

Advertisement

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக தொடங்கினார். ஆனால் மறுபக்கம் கேஎல் ராகுல் 13 ரன்னில் விக்கெட்டை இழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 6 ரன்களிலும் ஷுப்மன் கில் 13 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்து 29 பாந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

Advertisement

பின்னர் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டியும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து 145 ரன்கள் முன்னிலையுடன் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை ரவீந்திர ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் தொடர்ந்தனர். 

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா 13 ரன்களை சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரும் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 156 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்காட் போலண்ட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 161 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News